U. Sagayam

From Deletionpedia.org: a home for articles deleted from Wikipedia
Jump to: navigation, search


This article was considered for deletion at Wikipedia on November 19 2014. This is a backup of Wikipedia:U._Sagayam. All of its AfDs can be found at Wikipedia:Special:PrefixIndex/Wikipedia:Articles_for_deletion/U._Sagayam, the first at Wikipedia:Wikipedia:Articles_for_deletion/U._Sagayam. Purge

U. Sagayam
Born 03-07-1962
Pudukkottai, Tamil Nadu
Residence Chennai
Nationality Indian
Alma mater University of Madras
Occupation Chairman, Science city, Tamil Nadu
Religion Christian
Spouse(s) Vimala
Children Yalini , Thileeban

Ubagarampillai Sagayam (உபகாரம்பிள்ளை சகாயம்) (born 3rd July 1962)[1][2] is an Indian Administrative Service (IAS) officer. He is currently the Chairman of Science city,Tamil Nadu. [3][4][5] He is the first IAS officer in the state to make his assets public - a bank balance of Rs 7,172 and a house in Madurai worth Rs 10 lakh.[6]

Early Life and Education

U.Sagayam is the youngest of five sons of a farmer from Perunchunai village, Pudukkottai, Tamil Nadu. He hails from a poor agricultural family. He did his schooling in a Tamil-medium Panchayat Elementary school and in a Government Higher secondary school at Ellaippatti, 7 km away from his home which he walked all the way back and forth everyday. He got his undergraduate degree from H. H. The Rajah's College, Pudukkottai and his postgraduate degree from Loyola College, Chennai in Social Work. Later he joined Dr. Ambedkar Government Law College, Chennai and got a degree in law. After that he appeared for the Civil Service Examinations. He’d cleared the civil service exam but had not been selected as an IAS officer, so pursued his Tamil Nadu Public Service Commission exams, was selected as an IAS officer and became sub divisional magistrate of Ootacamund (popularly called Ooty) in 1991 [7]

Work policy and Career

Lanjam thavirtthu,nenjam nimirtthu (லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து) (Reject bribe and hold your head high) is his mantra. And because of this policy, he was transferred for 24 times in 23 years, the latest being twice in 48 hours for taking on Tamil Nadu's textile minister. He filed a case against the Union Minister Alagiri's son Durai who involved a granite quarry business which made a loss more than hundreds of crores of rupees to the government. Following this, he conducted voter awareness campaigns in colleges during the 2011 assembly elections. The DMK party to which Alagiri belongs petitioned the court twice, seeking to end what it said was an attempt to influence voters, but the court demurred. When he was in Kancheepuram district as revenue officer,he took on the sand mafia and sealed the bottling plant of Pepsi plant after impurities were found in 7_Up bottles, when a consumer complained and showed him a bottle of soft drink floating with dirt . He was also commended by the Chief Election Commissioner of India S.Y. Quraishi for conducting honest and bribe-free elections when he was the collector of Madurai district. கிரானைட் கடத்தலால் ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு: முன்னாள் கலெக்டர் சகாயம் Posted Date : 01-08-2012 06:42:28 AM Last updated : 01-08-2012 10:02:04 AM மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தொழில்துறை முதன்மைச் செயலாளருக்கு முன்னாள் கலெக்டர் சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார்.

மதுரை மாவட்ட கலெக்டராக சில மாதங்களுக்கு முன்பு வரை பொறுப்பில் இருந்தவர் சகாயம். இவர் கடந்த 19.5.2012 தேதியிட்டு தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,"மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவில் அரசு அனுமதி பெற்று குவாரிகள் நடத்தி வரும் பலர் அரசு புறம்போக்கு, பொதுப்பாதைகள்,கண்மாய்கள், குளங்கள், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும்,அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்துள்ளதாகவும் புகார்கள் வந்தன.

இதனால் தமிழக அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் எனது தலைமையில் துணை கலெக்டர்கள், தாசில்தார்கள் என்ற நிலையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது கிரானைட் கற்களை கடத்திய வாகனங்கள் எதுவும் சிக்கவில்லை.

கிரானைட் கற்கள் கடத்தல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பது தெளிவாகிறது. மேலூர் பகுதியில் குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன. அதனை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் சில பகுதிகளில் ஆய்வு செய்தபோது அனுமதி இல்லாமல் கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அறிவுறுத்தியும் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு கிரானைட் உரிமையாளர்கள் மூலம் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதும் ஒரு காரணம். அத்துடன் அதிகாரிகளுக்கு பெருமளவில் நிதி ஆதாயமும் கிடைத்துள்ளது. குறிப்பாக வருவாய்த்துறையில் கீழ் நிலையில் பணியில் இருப்போரும், கனிமவளத்துறை அலுவலர்களும் பெரும் பலனை அடைந்திருக்கிறார்கள்.

அதற்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்க நினைத்தபோது கனமவளத்துறையினரிடம் இருந்து முழுமையான தகவல்களை பெற முடியவில்லை. அத்துடன் நான் தணிக்கைக்கு செல்லும் விவரங்களை கிரானைட் உரிமையாளர்களுக்கு சில அலுவலர்கள் முன்னதாகவே தெரிவிக்கும் நிலையும் இருந்தது. கனிம வளம் என்பது தேசத்தின் சொத்து. அதனை தனி நபர்களும், நிறுவனங்களும் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது.

குறிப்பாக, மேலூர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இது நடந்துள்ளது. கிரானைட் கற்கள் கடத்தலால் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்தநிலை தொடராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் திருடப்பட்ட கற்களை கைப்பற்றி பொது ஏலம் விட வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்நாடு கனிமவள நிறுவனமே கிரானைட் கற்களை எடுத்து விற்பனை செய்ய வேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட பறக்கும்படை அமைத்து கிரானைட் குவாரிகளை சோதனை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

அன்சுல்மிஸ்ரா விளக்கம்

இந்நிலையில், கடிதத்தை அனுப்பிய கலெக்டர் சகாயம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அன்சுல் மிஸ்ரா மதுரை மாவட்ட கலெக்டராக உள்ளார். அவரிடம் இந்த கடிதம் தொடர்பாக கேட்டபோது அவர் கூறியதாவது:-

புகாரில் கூறப்பட்டுள்ளவை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடுகள் செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணைக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல்வேறு ஆய்வுகளை செய்கின்றனர். இந்த மாதத்தின் இறுதியில் அவர்கள் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுமையான அறிக்கை கிடைத்ததும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

References